புதுச்சேரி

மத்திய அரசிடம் நிதி பெறுவது ஆளுநரின் கடமை: திமுக

DIN

மாநிலத்தின் தேவை அறிந்து மத்திய அரசிடம் நிதி பெறுவது ஆளுநரின் கடமை என திமுக கூறியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் இரா.சிவா கூறியதாவது: சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களோடு இணைந்து பணியாற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டை ஆளுநர் முன் வைத்துள்ளார். இந்திய அளவில் ஒப்பிடும்போது, புதுவை யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.க்கள்தான் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
மாநில அரசின் தேவைகளை அறிந்து, மத்திய அரசிடம் நிதியைப் பெற்றுத்தர வேண்டியது ஆளுநரின் கடமை. நிதி கேட்டு முதல்வர் பல முறை மத்திய அரசிடம் நேரில் சென்று வலியுறுத்தியும் இதுவரை ஒரு ரூபாயைக் கூட வழங்கவில்லை என்பதே உண்மை. புதுவை ஆளுநர் நிதியைப் பெற்றுத் தர ஒத்துழைப்பு அளித்திருக்க  வேண்டும்.
கடந்த ஓராண்டாகவே புதுவை அரசை விமர்சித்து வந்த ஆளுநரை, அவரது உரையின்  மூலமாகவே அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிடச் செய்து, அமைச்சரவை தன் திறமையைக் காட்டியுள்ளது. ஆளுநர் தன்னுடைய  செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு, மாநில நலனுக்கு முட்டுக்கட்டையாக இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு இணைந்து செயல்பட வேண்டும் என்றார் சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

SCROLL FOR NEXT