புதுச்சேரி

தேசிய திறனறித் தேர்வு: 5,262 பேர் பங்கேற்பு

DIN

புதுவையில் நடைபெற்ற தேசிய திறனறித் தேர்வில் 5,262 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
புதுவை மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனறி முதல் நிலை தேர்வு (என்டிஎஸ் ஸ்டேஜ்-1) மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு (என்எம்எம்எஸ்) நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மழை காரணமாக தேர்வுகள் நவ.18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை தேசிய திறனறி முதல் நிலை தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடந்தது.
புதுச்சேரி பிராந்தியத்தில் அன்னை சிவகாமி பள்ளி, திருவள்ளூவர் பள்ளி, கதிர்காமம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இந்திரா நகர் அரசுப் பள்ளி, சின்னாத்தா பள்ளி, நாவலர் பள்ளி, வள்ளலார் பள்ளி, வில்லியனூர் விவேகானந்தா பள்ளி உள்ளிட்ட 12 மையங்களில் என்டிஎஸ் தேர்வு நடந்தது.
காரைக்கால், ஏனாமில் தலா 2 மையங்கள், மாகேவில் ஒரு மையம் உள்பட மாநிலம் முழுவதும் 17 மையங்களில் தேர்வு நடந்தது.
மொத்தம் 5,650 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5,262 பேர் (93.13%) பங்கேற்றனர்.
அதேபோல, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு புதுச்சேரியில் 6, காரைக்கால், மாகே, ஏனாமில் தலா ஒன்று என மொத்தம் 9 மையங்களில் நடைபெற்றது. 2,494 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 2,394 பேர் (95.99%) தேர்வு எழுதினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT