புதுச்சேரி

புதுச்சேரியில் "மெர்சல்' பட பதாகைகளை அகற்ற விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு: பாதியிலேயே திரும்பிச் சென்ற நகராட்சி அதிகாரிகள்

தினமணி

புதுச்சேரியில் "மெர்சல்' பட பதாகைகளை அகற்றுவதற்கு, நடிகர் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திங்கள்கிழமை பாதியிலேயே நகராட்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஜய் நடித்துள்ள "மெர்சல்' திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே பதாகைகளை வைத்துள்ளனர். இந்த நிலையில், அந்தத் திரைப்படம் வெளியாகும் திரையரங்க வாயில்களில் பதாகைகளை வைத்து வருகின்றனர்.

புதுச்சேரியில் பதாகைகள், கட் அவுட்கள் வைப்பதற்கு அரசின் தடை உள்ளது. இதற்கிடையே திடீரென புதுச்சேரி நகராட்சி ஆணையர் கணேசன் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பதாகைகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் புதுச்சேரி அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த "மெர்சல்' படத்தின் பதாகைகளை அகற்றினர்.

இதுகுறித்து அறிந்த நடிகர் விஜய் ரசிகர்கள் அங்கு திரண்டு வந்தனர். பதாகைகளை அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசியல்வாதிகள் உள்பட பலரது பதாகைகள் பல மாதங்களாக அகற்றப்படாமல் இருக்கும் போது விஜய் பட பதாகைகளை மட்டும் அகற்றுவது ஏன் என கேள்வி எழுப்பினர். இதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அதிகாரிகள் விழித்தனர்.

இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பதாகைகளை அகற்றுவதற்கு கண்டனம் தெரிவித்து, அண்ணா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதேசமயம் அங்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் பதாகைகளை அகற்றுவதை பாதியிலேயே கைவிட்டு திரும்பிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT