புதுச்சேரி

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டம்

தினமணி

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
 புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு இதுவரை பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. இதனைக் கண்டித்து நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
 புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஜோசப் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர்கள் மத்தியக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் லட்சுமணசாமி சிறப்புரையாற்றினார்.
 கூட்டமைப்பின் கெüரவத் தலைவர் உதயகுமார், நகராட்சிக் கூட்டமைப்புத் தலைவர் விநாயகவேல், செயலர் பத்ரிஸ் தெலாமாஷ், பொறுப்பாளர் பன்னீர்செல்வம், புதுவை நகராட்சி பியூன் - வாட்ச்மேன் சங்கத்தின் செயலர் இருசப்பன், சுகாதார நற்பணித் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஐயப்பன், நகராட்சிப் பணிமனை ஊழியர்கள் சங்கச் செயலர் ஜெயமுர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT