புதுச்சேரி

ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவன என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு 

தினமணி

புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற 7 நாள் சிறப்பு முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது.
 நிறுவன முதல்வர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மோகன்ராஜ் முகாம் அறிக்கை வாசித்தார். விரிவுரையாளர் திருநாராயணன் வரவேற்றார். விரிவுரையாளர் நடேசன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக என்எஸ்எஸ் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் தேவபாலன் கலந்து கொண்டு, மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், பசுமை புதுச்சேரியாக மாற்றப்பட வேண்டிய அவசியத்தையும், அதன் வழிமுறைகளையும் எடுத்துக் கூறினார். பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
 மாணவிகள் அனந்தலட்சுமி, அனிதா ஆகியோர் முகாமின் செயல்பாடுகள் பற்றி கருத்துரைகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர் சித்ரா, அருணகிரி, மெர்லின், லாரன்சியா மேரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT