புதுச்சேரி

காங்கிரஸ் திட்டங்களை பாஜக கிடப்பில் போட்டு வருகிறது: நடிகை நக்மா 

தினமணி

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை மத்திய பாஜக அரசு கிடப்பில் போட்டு வருகிறது என அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நடிகை நக்மா குற்றஞ்சாட்டினார்.
 புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் அருகே சோரப்பட்டில் புதுவை மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிர் விழிப்புணர்வு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நடிகையுமான நக்மா கலந்து கொண்டு மகளிருக்கு நல உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
 மத்திய பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இங்குள்ள மகளிருக்கு ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கப்படவில்லை என குறை கூறியிருந்தனர்.
 காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை பாஜக அரசு கிடப்பில் போட்டு வருகிறது.
 புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுத்தும் திட்டங்களை ஆளுநர் கிரண் பேடி தடுத்து வருகிறார். நல்லது செய்யவும் விடாமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். புதுவை ஆளுநரை உடனே திருப்பி அனுப்ப வேண்டும்.
 தமிழக விவசாயிகள் தில்லி சென்று போராடினார்கள். அவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்று கூட மத்திய அரசு கேட்கவில்லை. தமிழகம், புதுவையில் 2 முறை புயல் தாக்கியது. ராகுல்காந்தி புயல் பாதித்த பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். ஆனால், பிரதமர் மோடி ஹெலிகாப்டரிலேயே சென்று பார்வையிட்டார். உத்தரபிரதேசத்தில் 18 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்தும் அதனை ஏற்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டதால் ஓராண்டுக்குப் பிறகு பிறகு நடவடிக்கை எடுக்கின்றனர்.
 வரும் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும். அதற்கு அனைவரும் பாடுபடவேண்டும் என்றார்.
 விழாவில் பாட்ஷா திரைப்பட பாடலை பாடி தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் நக்மா.
 விழாவுக்கு புதுவை மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் துர்கா தாஸ் முன்னிலை வகித்தார். முதல்வர் நாராயணசாமியின் மகள் விஜயகுமாரி வரவேற்றார்.
 இதற்கான ஏற்பாடுகளை பிரதேச காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முத்தழகன், வீராசாமி மற்றும் மகிளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 எங்களுக்கு பாட்ஷா ராகுல் காந்திதான்
 விழாவில், நடிகை நக்மாவை பாட்டு பாடுமாறு தொண்டர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அவர் பாட்ஷா திரைப்படத்தில் வரும், நீ நடந்தால் நடை அழகு, நீ சிரித்தால் சிரிப்பழகு, நீ பேசும் தமிழ் அழகு என்று பாடினார். பின்னர், இந்த பாட்டை ரஜினிக்காக பாடவில்லை. ராகுல் காந்திக்காக பாடினேன். எங்களுக்கு ராகுல் காந்திதான் பாட்ஷா என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT