புதுச்சேரி

அமைச்சர் மல்லாடியை விமர்சித்த வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை 

தினமணி

சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவை விமர்சித்து சுவரொட்டி ஒட்டிய வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
 புதுவையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவை விமர்சித்து புதுச்சேரியில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இந்த சுவரொட்டியை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெரியகடை காவல் நிலையத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புகார் அளித்தார். அதன் பேரில், முரசொலி மாறன் பேரவையைச் சேர்ந்த நடராஜன், சல்லி அழகர் (எ) சத்யா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்றது. 10 ஆண்டுகாலமாக நடைபெற்ற இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் விடுவித்து தீர்ப்பு அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT