புதுச்சேரி

புயல் எதிரொலி: வெறிச்சோடியது கடற்கரை 

DIN

கஜா புயல் காரணமாக, புதுச்சேரியில் வியாழக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டதையொட்டி, கடற்கரைப் பகுதி வெறிச்சோடியது. பாதுகாப்பு காரணமாக, கடற்கரைச் சாலையில் போக்குவரத்துக்குத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
 கஜா புயலை எதிர்கொள்ள கடந்த 5 நாள்களாக புதுவை அரசு, மாவட்ட நிர்வாகம் ஆயத்தப் பணிகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டன. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். கடலுக்குள் சென்ற மீனவர்களும் கரை திரும்பிவருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் அனைத்து மீனவர்களும் கரைக்குத் திரும்பியுள்ளனர்.
 மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை தங்கவைக்க சமுதாய நலக் கூடம், அரசுப் பள்ளி ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு முன்பு வரை புதுச்சேரியில் புயலுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது. ஆனால், காலை 10 மணிக்கு மேல் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு காற்று வீசத் தொடங்கியது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் புதுச்சேரியே இருள் படர்ந்து காணப்பட்டது. காலை 10 மணிக்கு மேல் இடியுடன் லேசான மழை பெய்யத் தொடங்கியது. புயல் காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. ஒரு மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பின. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
 கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் இறங்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து வியாழக்கிழமை மாலை முதல் நிறுத்தப்பட்டது. புதுச்சேரி கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை காலை முதல் போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மேலும், கடற்கரைப் பகுதியில் போலீஸார் ஒலிபெருக்கி மூலம் புயல் எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
 புயல் காரணமாக புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி படகு குழாம் ஆகியவற்றில் படகு சேவை ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT