புதுச்சேரி

பல்கலை. நீச்சல் போட்டி: புனித போப் ஜான் கல்லூரி வெற்றி

தினமணி

புதுவை பல்கலைக்கழக அளவிலான நீச்சல் போட்டியில் புனித போப் ஜான் கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.
 புதுவை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கு இடையே ஆடவர், மகளிருக்கான நீச்சல் போட்டி செப். 20 முதல் 22-ஆம் தேதி வரை முருங்கம்பாக்கம் நீச்சல் குளத்தில் நடைபெற்றது.
 இதில் 20 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 60 நீச்சல் வீரர்கள் கலந்து கொண்டனர்.
 பிரி ஸ்டைல், மேக் ஸ்ரோக், பட்டர்பிளை உள்ளிட்ட 8 பிரிவிலும், மற்றும் ரிலே போட்டிகளும் நடைபெற்றன. இதில், போப் ஜான் கல்வியியல் கல்லூரி முதலிடத்தையும், ராஜீவ் காந்தி கலைக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், ஆச்சார்யா கலைக் கல்லூரி முன்றாவது இடத்தையும் பெற்றன.
 இறுதியில், புதுவை காவல் துறைக் கண்காணிப்பாளர் முனைவர் பாஸ்கர், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். பல்கலைக்கழக உதவி விளையாட்டு அதிகாரி சிவராமன் நன்றி கூறினார்.
 பரிசளிப்பு நிகழ்ச்சியில் நீச்சல் பயிற்சியாளர் சுவாமிநாதன், கல்லூரி உடல் கல்வி இயக்குநர்கள் ஆசிம், சூரியமூர்த்தி, ஜேம்ஸ், சந்திரசேகர், போத்திராஜ், ஜி. ஜி. தாமஸ், தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT