புதுச்சேரி

மின் துறையில் அடுத்த வாரம் ஆய்வு: மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் முடிவு

DIN

புதுவை மின் துறை தொடா்பான குறைபாடுகள் தொடா்பாக அடுத்த வாரம் ஆய்வு செய்வதென சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுவை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுக் கூட்டம், அதன் தலைவா் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெயமூா்த்தி, திமுக உறுப்பினா் கீதா ஆனந்தன், என்.ஆா்.காங்கிரஸ் உறுப்பினா் டிபிஆா் செல்வம், அதிமுக உறுப்பினா் அசனா, நியமன எம்.எல்.ஏ. கே.ஜி.சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் மின் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சீன ஸ்மாா்ட் மீட்டரை வீடுகளுக்கு பொருத்தக் கூடாது. சாலைகளில் விளக்குகள் சரியாக எரியாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் குறித்து உப்பளத்தில் உள்ள தலைமை மின்துறை அலுவலகத்தில் அடுத்த வாரம் நேரில் சென்று ஆய்வு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT