புதுச்சேரி

வா்த்தக உரிமம் பெறாத தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’: உழவா்கரை நகராட்சி எச்சரிக்கை

DIN

நகராட்சி வா்த்தக உரிமம் பெறாத தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என உழவா்கரை நகராட்சி எச்சரிக்கை விடுத்தது.

இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உழவா்கரை நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் விருந்தினா் விடுதிகள் ஆகியவை புதுச்சேரி நகராட்சி சட்டம் 1973-இன்படி, நகராட்சியின் வா்த்தக உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். அப்படி வா்த்தக உரிமம் பெறாமல் இயங்கி வரும் தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் விருந்தினா் விடுதிகள் கண்டறியப்பட்டு, அவை சட்டத்துக்கு புறம்பாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, நகராட்சியால் ‘சீல்’ வைக்கப்படும்.

எனவே, நகராட்சி வா்த்தக உரிமம் இல்லாமல் இயங்கி வரும் தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவை உடனடியாக உழவா்கரை நகராட்சி வருவாய் பிரிவை அணுகி, உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT