புதுச்சேரி

புதுவை பல்கலை.யில் பகுதி நேர எம்.பி.ஏ. படிப்பு விரைவில் தொடக்கம்

DIN


புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் பகுதி நேர எம்.பி.ஏ. படிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து பல்கலை. நிர்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வியல் துறை சார்பில் நிதி, மனித வளம், சந்தைப்படுத்துதல் - இயக்கம் ஒழுங்கு மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் எம்.பி.ஏ., பாடப் பிரிவுகள் உள்ளன.
இந்த நிலையில், நிகழாண்டில் (2019) எம்.பி.ஏ. முழு நேரப் பாடப் பிரிவில் வணிகப் பகுப்பாய்வு என்ற பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல, பகுதி நேர சுயநிதி கல்வி முறைத் திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளுக்கான புதிய எம்.பி.ஏ., பாடப்பிரிவும் தொடங்கப்பட உள்ளது.
வணிக பகுப்பாய்வு பாடப் பிரிவில் பி.காம், பி.பி.ஏ., பி.எஸ்சி, பொறியியல் துறைகளில் இளநிலைப் பாடப் பிரிவில் 50 விழுக்காடு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பட்டப் படிப்பை முடித்திருந்தால் போதும். எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், கலந்துரையாடல் மற்றும் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இதுதொடர்பான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும். இதற்கான நுழைவுத் தேர்வு புதுச்சேரியில் மட்டுமே இணையதளம் மூலம் நடத்தப்படும். 
பணியாற்றும் நிறுவனங்களிலிருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்கலாம். மாலை 6 முதல் 9 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT