புதுச்சேரி

அரசின் இணையதளத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை

DIN

புதுவை அரசின் இணையதளத்தை முறையாகச் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தக் கட்சித் தலைவர் பாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவை அரசின் இணையதளம் சரியாக இயங்கவில்லை. வலைதளத்தில் ஆங்கிலத்தில் புதுச்சேரி கவர்மென்ட் வெப்சைட் என்று டைப் செய்தாலே அரசின் இணையதள முகவரி (‌w‌w‌w.‌p‌y.‌g‌o‌v.‌i‌n) வந்துவிடும். அதன் மூலம் இணையதளத்துக்குள் சென்றுவிடலாம். 
தற்போது ‌w‌w‌w.‌p‌o‌n.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளம் மட்டுமே கூகுள் தேடலில் வருகிறது. அதை கிளிக் செய்தாலும், இணையதளத்துக்குள் செல்வதில்லை. இணையதள பிரிவில் பராமரிப்புப்  பணிகள் ஏதேனும் நடந்தாலும், அதுகுறித்து மாநில மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டியது அடிப்படை கடமை. எனவே, உடனடியாக அரசின் இணையதளத்தை செயல்பாட்டுக்கு வரவேண்டும். இனி எந்தக் காரணம் கொண்டும், இந்த இணையதளம் செயல்படுவதில் தொய்வு ஏற்படக் கூடாது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT