புதுச்சேரி

புதுச்சேரியிலிருந்து மதுக் கடத்தல்: இருவர் கைது

DIN

திண்டிவனம்:  திண்டிவனம் அருகே போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுப் புட்டிகள் மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
திண்டிவனத்தை அடுத்த கிளியனூர் அருகே போலீஸார் சனிக்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையில் வேனில் கடத்தி வரப்பட்ட புதுவை மாநில 2400 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், வளவனூர் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் போலீஸார் மேற்கொண்ட வாகனச் சோதனையில் 590 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
இவை அனைத்தும் திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். 
அப்போது அவர் கூறியதாவது:  தேர்தல் ஆணைய உத்தரவின்படி மதுக் கடத்தலில் ஈடுபடுவோரையும், கள்ளத் துப்பாக்கி வைத்திருப்போரையும் கண்டுபிடித்து கைது செய்து வருகிறோம்.
வேனில் மதுப் புட்டிகள் கடத்தியது தொடர்பாக, செஞ்சி  வட்டம், கோரைகேணியைச் சேர்ந்த சேகர்(25), செட்டிபாளையம் விநாயகமூர்த்தி(23) ஆகியோரை கைது செய்துள்ளோம். கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் பறிமுதல் செயயப்பட்ட மதுப் புட்டிகள் வழக்கில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். 
திண்டிவனம் டி.எஸ்.பி கனகேஸ்வரி மற்றும் மதுவிலக்கு போலீஸார் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT