புதுச்சேரி

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய பெருவிழா

DIN

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த ஆலயத்தில் நிகழ் ஆண்டுக்கான ஆலய பெருவிழா வெள்ளிக்கிழமை காலை திருப்பலி முடிந்து கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுச்சேரி - கடலூர் மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் கொடியேற்றினார். இந்த விழா வருகிற 
12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் திருப்பலி, மறையுரை, சிறிய தேர்பவனி, திவ்ய நற்கருனை ஆகியவை நடைபெறும். 
விழாவின் முக்கிய நிகழ்வாக அலங்காரத் தேர்பவனி மே 12-ஆம் தேதி மாலை நடைபெறும். முன்னதாக, அன்று காலை 5 மணிக்கு வேலூர் மறைமாவட்ட ஆயர் செளந்தரராஜு தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத் தந்தை ஆரோக்கியநாதன் உள்ளிட்ட விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT