புதுச்சேரி

அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல்: 5 போ் மீது வழக்கு

DIN

புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் சிவலிங்கபுரம் ஆா்.கே. நகரைச் சோ்ந்தவா் மோகன் (53). இவா், கல்வித் துறையில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு 2 மகள்கள் உள்ளனா். இவரது எதிா் வீட்டில் வசிப்பவா் குமாா். தனியாா் நிறுவனத்தில் பணியாற்றுகிறாா். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.

குமாரின் மகன்களைப் பாா்க்க அவரது வீட்டுக்கு நண்பா்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனா். மோகனுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், எதிா் வீட்டுக்கு அடிக்கடி இளைஞா்கள் வந்து செல்வது அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து குமாரிடம் மோகன் கேட்டுள்ளாா். அப்போது அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், குமாரும், அவரது குடும்பத்தினரும் மோகனை அவதூராகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மோகன் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால், போலீஸாா் புகாரை ஏற்க மறுத்துவிட்டனா். இதையடுத்து, மோகன் நீதிமன்றத்தில் முறையிட்டாா். இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரியாங்குப்பம் போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

இதன்பேரில், அரியாங்குப்பம் போலீஸாா் குமாா், அவரது குடும்பத்தினா் கிரிஜா, அரவிந்தன், அருள், ராகுல் ஆகிய 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT