புதுச்சேரி

புதுவை அரசின் கடன் சுமை அதிகரிப்புக்கு முந்தைய என்.ஆர்.காங். ஆட்சியே காரணம்: காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு

DIN


புதுவை அரசின் கடன் சுமை அதிகரிப்புக்கு முந்தைய என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ரங்கசாமியின் திறமையற்ற நிர்வாகமே காரணம் என்று காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஜான்குமார் குற்றஞ்சாட்டினார்.
காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்குமார், கட்சி நிர்வாகிகளுடன் சாரம், தென்றல் நகர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று சனிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புதுவை அரசு செலுத்த வேண்டிய ரூ.8,500 கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். 
அவ்வாறு செய்தால், பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் நானே பிரசாரம் செய்வேன். 
அதேபோல, கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் என். ரங்கசாமியின் திறமையற்ற நிர்வாகத்தால்தான் புதுவையில் உள்ள 
ஒவ்வோர் குடிமகன் மீதும் ரூ.60 ஆயிரம் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. அவரது ஆட்சி காலத்தில் வாங்கப்பட்ட கடனை தற்போதைய ஆளும் காங்கிரஸ் அரசு அடைத்து வருகிறது. 
மத்திய அரசிடம் என்.ஆர்.காங்கிரஸ்  வலியுறுத்தி புதுவை மாநிலத்தின் கடன்களை தள்ளுபடி செய்தால், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் அமரவும் தயார் என்றார் 
அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT