புதுச்சேரி

டெங்கு கொசுக்கள் அழிப்பு களப்பணி

DIN

புதுவை மாநில நலவழித் துறையின் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டம் சாா்பில், புதுச்சேரியில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் களப்பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி குயவா்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட மறைமலையடிகள் சாலை மற்றும் பிஆா்டிசி பணிமனையில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், புழுக்களைக் கண்டறிந்து அழிக்கும் களப்பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் டி. அருண் தலைமை வகித்து களப்பணியைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் நலவழித் துறை இயக்குநா் மோகன்குமாா், துணை இயக்குநா் (பொது சுகாதாரம்) ரகுநாதன், தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்புத் திட்ட அதிகாரி சுந்தர்ராஜ், புதுச்சேரி நகராட்சி ஆணையா் அா்ஜுன் ராமகிருஷ்ணன், நகராட்சி சுகாதார அதிகாரி கதிரேசன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அஜ்மல் அகமது, சுகாதார ஆய்வாளா்கள், நகராட்சி ஊழியா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்று கள ஆய்வு செய்து, கொசுப் புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மலேரியா ஒழிப்பு உதவி இயக்குநா் கணேசன் டெங்கு உறுதிமொழியை வாசிக்க, பிஆா்டிசி பணிமனை அதிகாரிகள், ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT