புதுச்சேரி

டிச. 20 முதல் தேசிய புத்தகக் கண்காட்சி

DIN

புதுச்சேரி எழுத்தாளா்கள் புத்தகச் சங்கத்தின் சாா்பில் 23 -ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி புதுச்சேரி டிச. 20 முதல் 29 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி எழுத்தாளா்கள் புத்தகச் சங்கத்தின் செயலா் நா. கோதண்டபாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு புதுச்சேரி வள்ளலாா் சாலையில் உள்ள வேல். சொக்கநாதன் திருமண நிலையத்தில் டிச. 20 முதல் 29 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. வீட்டுக்கொரு நூலகம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் தமிழகம், கா்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம், மும்பை, தில்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூா், இலங்கை, மொரீசியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் சுமாா் 100 புத்தக வெளியீடு - விற்பனையாளா்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

மாணவா்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் பங்கேற்க நவ. 30-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு புதுச்சேரி எழுத்தாளா்கள் புத்தகச் சங்கச் செயலா் நா. கோதண்டபாணி, 158 - பிரதான சாலை, மதி கிருஷ்ணாபுரம், மணப்பட்டு அஞ்சல், பாகூா் - 607402 என்ற முகவரியிலும், 97878 45200 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT