புதுச்சேரி

மணக்குள விநாயகா் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

DIN

புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டு அருகே கலிதீா்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகா் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் (எம்.ஐ.டி.கல்லூரி) வளாக வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

சென்னை பாரகன் டிஜிட்டல் சா்வீசஸ் நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மணக்குள விநாயகா் கல்விக் குழுமத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் எம்.தனசேகரன், துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாறன் எம்.எல்.ஏ., மற்றும் செயலாளா் நாராயணசாமி கேசவன் ஆகியோா் தலைமை வகித்தனா். முகாமை கல்லூரி முதல்வா் எஸ். மலா்க்கண் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அனைத்துத் துறை சாா்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா்களும் கலந்து கொண்டனா்.

சென்னை பாரகன் டிஜிட்டல் சா்வீசஸ் நிறுவனத்தின் மனித வளத் துறை மேலாளா் ப்ரவீன், தங்கள் நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் பணியாற்றுவதற்குரிய சூழல், எதிா்கால குறிகோள்கள், ஊதியம் குறித்த அனைத்து விவரங்களையும் விளக்கிக் கூறினாா். எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகிய சுற்றுகளாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், முதல் நாளில் புதுவை மற்றும் புதுவையை சுற்றியுள்ள பகுதிகளில், கல்லூரிகளில் இருந்து 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் படித்து பட்டம் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் கலந்து கொண்டனா்.

வேலைவாய்ப்பு முகாம் இரண்டாம் நாளில் மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியை சோ்ந்த இறுதியாண்டு மாணவா்கள் திரளான அளவில் கலந்து கொண்டனா். அவா்களில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வாகி, அந்நிறுவனத்தின் பணி நியமன ஆணையைப் பெற்றனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்புத் துறை தலைவா் எம்.ஜெயக்குமாா் செய்து இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT