புதுச்சேரி

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் புதுவை பாஜக நிர்வாகி கைது

DIN


புதுச்சேரி காலாப்பட்டில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்ட வழக்கில், பாஜக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர். 
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (51). காங்கிரஸ் பிரமுகரான இவர், கடந்த 23- ஆம் தேதி தனது மனைவியுடன் பைக்கில் சென்ற போது, ரெளடி சுகன் தலைமையிலான கும்பல் சந்திரசேகர் மீது வெடிகுண்டை வீசியும், வெட்டியும் கொலை செய்தது.
புதுச்சேரியில் கடந்தாண்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.  இதனிடையே, ரெளடி சுகன், ரங்கராஜ், அப்துல் நசீம் ஆகிய 3 பேர் புதுச்சேரி நீதிமன்றத்தில் அண்மையில் சரணடைந்தனர். இவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதில், புதுச்சேரியைச் சேர்ந்த 2 ரெளடிகளின் தூண்டுதலின் பேரில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, புதுச்சேரி லாசுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சோழனை (33) போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சோழன், புதுவை மாநில பாஜக வர்த்தக அணித் தலைவராக உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT