புதுச்சேரி

சாலையோர வாகனங்களை அகற்ற வீடு வீடாக போலீஸார் துண்டு பிரசுரம் விநியோகம்

DIN


சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற சனிக்கிழமை வீடு வீடாக போலீஸார் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
புதுச்சேரி லாசுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஜிஞ்சர் ஹோட்டலில் தொடங்கி காமராஜர் மணி மண்டபம்,  கல்லூரி சாலை, நேதாஜி சாலை வரையும், விமான நிலைய சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி வாசிகள் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி வடக்கு காவல்  கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார்கள் வந்த நிலையில், கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின் பேரில், சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி, லாசுப்பேட்டை போலீஸார் அந்தப் பகுதி மக்களுக்கு வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீஸார் விநியோகித்தனர்.
அந்த துண்டு பிரசுரத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சாலைகளில் கல்வித் துறை வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் அதிகளவில் சென்று வரும் நிலையில், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே, இனி வரும் நாள்களில் இந்தச் சாலைகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT