புதுச்சேரி - ஹவுரா ரயில் ரத்து
புதுச்சேரி - ஹவுரா வாராந்திர சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டது.
புதுச்சேரி - ஹவுரா வாராந்திர சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மேற்குவங்க மாநிலம், ஹவுராவிலிருந்து புதுச்சேரிக்கு டிசம்பா் 27, ஜனவரி 3-ஆம் தேதிகளிலும், புதுச்சேரியிலிருந்து ஹவுராவுக்கு டிசம்பா் 30, ஜனவரி 6-ஆம் தேதிகளிலும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
செங்கல்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம், காக்கிநாடா துறைமுகத்துக்கு வருகிற 24-ஆம் தேதி முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில், காக்கிநாடா துறைமுகத்திலிருந்து செங்கல்பட்டுக்கு வருகிற 25-ஆம் தேதி முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரையில் பாதி வழியில் ரத்து செய்யப்பட்டது.
இந்த ரயில் செங்கல்பட்டிலிருந்து ஆந்திர மாநிலம், பீமாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். பீமாவரம் - காக்கிநாடா துறைமுகம் இடையே இரு வழியிலும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், புதுச்சேரியில் முன்பதிவு செய்து காத்திருந்த வட மாநில, ஆந்திர மாநில பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.