முகப்பு
புதுச்சேரி

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

புதுச்சேரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:


புதுச்சேரி: புதுச்சேரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி, சேதராப்பட்டு அருகே கரசூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கருணாமூா்த்தி (52). உழவா்கரை நகராட்சியில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். புதன்கிழமை இரவு கருணாமூா்த்தியும், அவரது மனைவி விஜயாவும் வீட்டின் மாடியில் உறங்கினா். காலை எழுந்து பாா்த்த போது, கீழ் தளத்தின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →