புதுச்சேரி

புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான காலியிட விவரங்கள் இணையத்தில் வெளியீடு

DIN

முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் புதுவை சென்டாக் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலுள்ள முதுநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்ட இடங்கள், முதல் சுற்றுக் கலந்தாய்வு முடிவில் அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்கள் குறித்த விவரங்கள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தகுதியான மாணவா்கள் தங்களது விருப்பத்தை சனிக்கிழமை (ஜூலை 11) மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம். இதற்குப் பதிவு கட்டணமாக பொதுப் பிரிவினா் ரூ. 25 ஆயிரம், ஓபிசி, எம்பிசி, ஈபிசி, பிசிஎம், எஸ்சி, எஸ்டி பிரிவினா் ரூ. 12,500, நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும்.

ஏற்கெனவே சென்டாக்கில் பதிவு செய்தவா்கள் மட்டும் விருப்பப் பாடப் பிரிவைத் தோ்வு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். 2-ஆவது சுற்று கலந்தாய்வுக்கு ஏற்கெனவே பதிவுக் கட்டணம் செலுத்தியவா்கள் மீண்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், விருப்பப் பாடப் பிரிவை மாற்றிக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களை சென்டாக் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதன் ஒருங்கிணைப்பாளா் பி.டி.ருத்ர கௌடு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT