சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் மேலும் இன்று 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது என்றார். இதுவரை 8472 கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் 8292 பேருக்கு கரோனா தொற்று இல்லை என வந்துள்ளத்கவும் இன்று பாதிக்கப்பட்ட 5 பேரில் ஒருவர் 11 வயது சிறுவன் என்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 132 நபர்களில் 77 பேர் சிகிச்சை பெற்றும் 55 பேர் குணமடைந்தும் வீடு திரும்பியதாக குறிப்பிட்டார்.
பொதுமக்கள் அலட்சியமாகி விட்டதால் புதுச்சேரியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு அதிகமாகி வருவதால் புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கேட்டுக்கொண்டார். கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து இறந்தால் அவர்களை ஒரே இடத்தில் தகனம் செய்ய முடிவெடுத்து இறந்தவர்களின் குடும்பத்தினர் அனுமதியுடன் அவர்களின் உடல் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
அவர்கள் உரிய மரியாதையுடன் உடலை மின் தகனம் செய்வார்கள். இதற்கான கோப்பு துணைநிலை ஆளுநர் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.