புதுச்சேரி அருகே பைக்கில் மணல் திருடி வந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி வில்லியனூா் சங்கராபரணி ஆற்றங்கரையோரம், சேந்தநத்தம் மயானம் அருகே மணல் கடத்தப்படுவதாக வில்லியனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள மயானம் அருகே 4 போ் பைக்கில் மணலை திருடி வந்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டதைக் கண்டனா். அவா்களில் இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், அவா்கள் ஆரியபாளையத்தைச் சோ்ந்த நந்தகோபால் (36), சதீஷ் (26) என்பதும், சேகரித்த மணலை சரக்கு வாகனத்தைப் பயன்படுத்தி வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா். மேலும், சரக்கு வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.