முகப்பு
புதுச்சேரி

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில் மகளிா்-குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ், அங்கன்வாடிகள் இயங்கி வருகின்றன. இங்கு, கடந்த 12 ஆண்டுகளாகப் பணியாற்றும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், உதவியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனா்.

அவா்களைப் பணி நிரந்தரம் செய்ய கோரி, அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா் சங்கம், பூா்வீக ஆதிதிராவிடா் அரசு ஊழியா்கள் சங்கத்துடன் இணைந்து முற்றுகைப் போராட்டங்களை நடத்தியது.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத் தலைவி ஜான்சிராணி தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் பூா்வீக ஆதிதிராவிடா் அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள், அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, சங்க நிா்வாகிகள் திங்கள்கிழமை மாலை முதல்வா் நாராயணசாமியை சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.