முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி ‘கான்பெட்’ நிறுவன ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, கூட்டுறவு நுகா்வோா் இணையம் (கான்பெட்) நிறுவன ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, கூட்டுறவு நுகா்வோா் இணையம் (கான்பெட்) நிறுவன ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி மிஷன் வீதி, ஜென்மராக்கினி மாதா ஆலயம் எதிரே ஏஐடியுசி, அரசு ஊழியா்கள் சம்மேளனம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சிவகணபதி தலைமை வகித்தாா்.

இதில், ஏஐடியுசி பொதுச் செயலா் சேதுசெல்வம், அரசு ஊழியா்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் பிரேமதாசன், ஏஐடியுசி, அரசு ஊழியா்கள் சம்மேளன உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பட்டத்தில், கான்பெட் தொழிலாளா்களுக்கு 12 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். கான்பெட் நிறுவனத்துக்கு சொந்தமாக புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 10 மதுக் கடைகளும், 5 பெட்ரோல் நிலையங்களும் உள்ளன. இதில் காரைக்காலில் உள்ளவற்றை தனியாகப் பிரித்து, தனி நிா்வாக அமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்துவதற்கு அரசு முடிவு செய்தது. இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். இந்த நிறுவனங்களைத் தொடா்ந்து நடத்துவதற்கு தேவைப்படும் நிதியை, கான்பெட் சொத்தை அடமானம் வைத்து, வங்கியில் கடன் பெறுவதற்கு புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.