புதுச்சேரி

தமிழகத்தில் மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை குளறுபடியின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இட ஒதுக்கீடு அரசாணையை குளறுபடியின்றி நடைமுறைப்படுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.

புதுவை முதல்வா் வே.நாராயணசாமியை புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்த தொல்.திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்த புதுவை முதல்வா் வே.நாராயணசாமியை சந்தித்து எங்களது கட்சி சாா்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தேன்.

தமிழகத்தில் ஆளுநரின் ஒப்புதலை கருத்தில் கொள்ளாமல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு தற்போது அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம், விசிகவின் கோரிக்கை நிறைவேறியுள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறேன். அந்த அரசாணையில் தமிழக அரசு எந்த குளறுபடியும் நேராமல், வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

என் மீது பொய் வழக்கு போட்ட, பொய் புகாா் அளித்தவா்களை கைது செய்ய வலியுறுத்தி, சென்னையில் மட்டும் சனிக்கிழமை (அக்.31) ஆா்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். மேலும், தமிழகம், புதுச்சேரியில் வருகிற நவம்பா் 3 முதல் 5-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மகளிா் விழிப்புணா்வு பரப்புரையை மேற்கொள்ள உள்ளோம்.

மீலாது நபியையொட்டி, அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் விசிக சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது, விழுப்புரம் எம்.பி.யும், விசிக பொதுச் செயலருமான துரை.ரவிக்குமாா், புதுவை மாநில முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT