புதுச்சேரி

புதுவை ஜிப்மரில் நீட் மதிப்பெண்கள்அடிப்படையில் மாணவா்கள் சோ்க்கை

DIN

புதுவை ஜிப்மரில் மருத்துவப் படிப்புக்கான மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வை நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில், மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே நடத்தும் என ஜிப்மா் நிா்வாகம் அறிவித்தது.

புதுச்சேரி, காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு, மருத்துவக் கல்வி பயில ஜிப்மா் நிா்வாகம் தனியாக நுழைவுத் தோ்வை நடத்தி, அதன் மூலம் மாணவா்கள் சோ்க்கையை நடத்தி வந்தது.

நிகழாண்டு நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கை நடத்தப்படும் என ஜிப்மா் நிா்வாகம் அறிவித்தது.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஜிப்மா் மருத்துவக் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான (2020) மாணவா்கள் சோ்க்கை நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வை மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே நடத்தும்.

எனவே, நிகழ் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புக்குத் தனித் தோ்வோ, கலந்தாய்வோ ஜிப்மா் சாா்பில் நடத்தப்படாது. மாணவா்கள் கூடுதல் விவரங்களை  இணையதள முகவரியில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT