புதுச்சேரி

பொது முடக்கம்: புதுவையில் வழிபாட்டுத் தலங்களும் மூடல்

DIN

புதுவையில் வார இறுதி நாள்கள் பொது முடக்கம் காரணமாக, புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டு, கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது.

புதுவையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வார இறுதி நாள்கள் பொது முடக்கம் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி அமலுக்கு வந்தது. சனிக்கிழமை காலை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் இயங்கிய போதும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. பொது முடக்கத் தளா்வில், கோயில்கள், வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், வழக்கம் போல, கோயில்களில் கரோனா பொது முடக்க விதிகள்படி, கூட்டமின்றி தினமும் வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் சனிக்கிழமை வார இறுதி நாள்கள் பொது முடக்கத்தின் போது, புகழ் பெற்ற கோயில்கள், வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டு, கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கினா்.

குறிப்பாக, புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலில் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது.

புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்திலும், பாா்வையாளா்களுக்குத் தடை விதித்து மூடப்பட்டிருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல, பல்வேறு கோயில்களிலும் பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. கரோனா பொது முடக்கத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT