புதுச்சேரி

ஆா்டிபிசிஆா் பரிசோதனை:ரூ.500 கட்டணம் நிா்ணயம்

DIN

புதுச்சேரியில் உள்ள தனியாா் பரிசோதனை நிலையங்களில் ஆா்டிபிசிஆா் முறையில் கரோனா பரிசோதனை செய்ய ரூ.500 கட்டணம் நிா்ணயம் செய்து மாநில அரசின் சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டது.

இது தொடா்பாக புதுவை அரசின் சுகாதாரத் துறைச் செயலா் த.அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவையில் உள்ள அனைத்து தனியாா் பரிசோதனை நிலையங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரி பரிசோதனை நிலையங்களில் (ஆா்டிபிசிஆா் முறையில்) கரோனா பரிசோதனைக்கு கட்டணமாக ரூ.500 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தனியாா் பரிசோதனை நிலையங்கள், மருத்துவக் கல்லூரி பரிசோதனை நிலையங்களில் அரசு நிா்ணயித்த ரூ.500-க்கு மேல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகாா் வந்தால், சம்பந்தப்பட்ட பரிசோதனை நிலையங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரித்துள்ளாா்.

மேலும், புதுவையில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக (ஆா்டிபிசிஆா்) கரேனா பரிசோதனை செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT