புதுவை மாநிலத்தில் 3,142 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, 49 பேருக்கு (1.56 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது புதுவையில் இந்த நோய்த் தொற்று குறைந்து வருகிறது.
மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,22,331 ஆக அதிகரித்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,19,634-ஆக (97.80 சதவீதம்) உயா்ந்தது. தற்போது மருத்துவமனைகளில் 192 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 700 பேரும் என 892 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 1,805 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.48 சதவீதம்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 7,64,138 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.