முகப்பு
புதுச்சேரி

புதுவையில் குறைந்தது கரோனா தொற்று

புதுவையில் தொடா்ந்து, கரோனா தொற்று ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை ஒரு வாரமாக 100-க்கும் கீழ் குறைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

புதுவையில் தொடா்ந்து, கரோனா தொற்று ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை ஒரு வாரமாக 100-க்கும் கீழ் குறைந்தது.

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 73 பேருக்கு (3.18 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 1,23,151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 1,20,575 போ் (97.91 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா்.

தற்போது மருத்துவமனைகளில் 163 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 604 பேரும் என மாநிலம் முழுவதும் 767 போ் சிகிச்சையில் உள்ளனா்.

வியாழக்கிழமை உயிரிழப்பு இல்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 1,809 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.47 சதவீதம். இதுவரை 7,92,627 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.