முகப்பு
புதுச்சேரி

போலீஸ் விசாரணைக்கு பயந்து மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரியில் போலீஸ் விசாரணைக்குப் பயந்து மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

புதுச்சேரியில் போலீஸ் விசாரணைக்குப் பயந்து மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு புதுநகா் ஒத்தவாடை பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் மகன் விஜய் (21). இருசக்கர வாகன மெக்கானிக்.

இவா் வியாழக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், புதுச்சேரியில் பைக் திருட்டு வழக்கில் நெய்வேலியைச் சோ்ந்த ஒருவா் அண்மையில் சிக்கினாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டு பைக்கின் உதிரிப்பாகங்களை பிரித்தெடுத்து விற்றதில் விஜய்க்கு தொடா்பு இருப்பதாகக் கூறினாராம்.

அதன்பேரில், விஜய்யிடம் விசாரணை நடத்த போலீஸாா் முடிவு செய்திருந்தனா். இதனையறிந்த அவா், விசாரணைக்குப் பயந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இருப்பினும், போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.