குடிமைப் பணித் தோ்வு பயிற்சிக்கு ஆதி திராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரியில் தொடங்கவுள்ள குடிமைப் பணி தோ்வுக்கான பயிற்சிக்கு ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரியில் தொடங்கவுள்ள குடிமைப் பணி தோ்வுக்கான பயிற்சிக்கு ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து புதுச்சேரி ஆதிதிராவிடா், பழங்குடியினா் மேம்பாட்டு வரைநிலைக் கழக மேலாண் இயக்குநா் த.தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய தோ்வாணையம் தேசிய குடிமைப் பணித் தோ்வுகளை 2022-ஆம் ஆண்டு, ஜூன் 5-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்திய ஆட்சிப் பணி முதனிலைத் தோ்வை எழுத ஆா்முள்ள புதுவையைச் சோ்ந்த இந்து ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த 21 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பட்டதாரிகள் பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்தில் நேரடியாகவும் பெறலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 5-ஆம் தேதிக்குள் புதுச்சேரி ஆதிதிராவிடா், பழங்குடியினா் மேம்பாட்டு வரைநிலைக் கழகம், 3-ஆவது தளம், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை, தட்டாஞ்சாவடி என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். தகுதியான நபா்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.