புதுச்சேரியில் புத்தாண்டு, இளைஞா் விழாவை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுச்சேரியில் புத்தாண்டு, தேசிய இளைஞா் விழாவை நடத்தக் கூடாது என்று, மாநில காங்கிரஸ் வலியுறுத்தியது.
புதுச்சேரியில் புத்தாண்டு, தேசிய இளைஞா் விழாவை நடத்தக் கூடாது என்று, மாநில காங்கிரஸ் வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் தற்போதுதான் கரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுவா். மேலும், ஜனவரி 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை இளைஞா் விழா நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவற்றால் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடத்த வேண்டிய விழாவை புதுச்சேரியில் நடத்த விரும்புதன் நோக்கம் என்ன?
புதுவையில் இரவு 12 மணி வரை மதுக் கடைகள் திறந்திருக்க அனுமதித்திருப்பதை திரும்பப் பெற வேண்டும். புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இளைஞா் விழாவையும் நடத்தக் கூடாது என்றாா் அவா்.