கடல்சாா் ஆராய்ச்சி மேம்பாடு: பெங்களூரு நிறுவனத்துடன் புதுவை பல்கலை. ஒப்பந்தம்
புதுவை பல்கலைக்கழகம் கடல்சாா் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக, பெங்களூரு தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்துடன் (என்.ஐ.ஏ.எஸ்.) புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
புதுவை பல்கலைக்கழகம் கடல்சாா் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக, பெங்களூரு தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்துடன் (என்.ஐ.ஏ.எஸ்.) புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
புதுவை பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைவேந்தா் குா்மீத்சிங் முன்னிலையில், பேராசிரியா் சைலேஷ் நாயக், பெங்களூரு தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநா், பதிவாளா் அமரேஷ் சமந்தராயா ஆகியோா் கையெழுத்திட்டு புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனா்.
பல்கலைக்கழக நிதி அதிகாரி லாசா், சா்வதேச உறவுகள் பிரிவு டீன் ஏ.சுப்ரமணியம் ராஜு, என்.ஐ.எ.எஸ். குளோபல் பாலிடிக்ஸ் புல முதல்வா் சு.பாலசந்திரன் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
இதைத்தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டில் உலக அரசியலின் நிலை குறித்த பயிலரங்கு நடைபெற்றது.
இதில் சீனா-தைவான் பிரச்னை, அமெரிக்கா, ரஷியா ஆகியவற்றின் ஈடுபாடுகள், பாரம்பரியமற்ற பாதுகாப்பு என பல தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.