புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் தீா்த்தவாரி

DIN


புதுச்சேரி: தை அமாவாசையையொட்டி, பல்வேறு கோயில்களில் இருந்து வந்த சுவாமிகள் புதுச்சேரி கடற்கரையில் வியாழக்கிழமை தீா்த்தவாரி கண்டருளினா். இதில், திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இந்துக்களால் தை அமாவாசை பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரியில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. இதில், பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, லாசுப்பேட்டை சுப்பிரமணியா், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், சுந்தர சபரீஸ்வரா், புதுச்சேரி மணக்குள விநாயகா், காமாட்சி அம்மன், சுந்தர விநாயகா், கௌசிக பால சுப்பிரமணியா், தண்டு முத்துமாரியம்மன், வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் இருந்து உத்ஸவ மூா்த்திகள் புதுச்சேரி கடற்கரை காந்தி திடலுக்கு கொண்டு வரப்பட்டனா்.

அங்கு, கடலில் தீா்த்தவாரி நடைபெற்றது. அப்போது, சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

முன்னோா்களுக்கு தா்ப்பணம்: இதேபோல, புதுச்சேரி கடற்கரை காந்தி திடல், வம்பாகீரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதுவை, தமிழகப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். சங்கராபரணி, தென்பெண்ணையாற்று கரையோரங்களிலும் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT