புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் மாளிகை அருகே போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு திறக்கப்பட்ட தலைமை தபால் நிலையச் சாலை. 
புதுச்சேரி

புதுவையில் கட்டுப்பாடுகள் நீக்கம்

புதுவை துணைநிலை ஆளுநராகப் பணியாற்றி வந்த கிரண் பேடி விடுவிக்கப்பட்ட நிலையில், சாலைகளில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன.

DIN

புதுவை துணைநிலை ஆளுநராகப் பணியாற்றி வந்த கிரண் பேடி விடுவிக்கப்பட்ட நிலையில், சாலைகளில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நிறைவு பெறவுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக அரசுக்கும் ஆளுநருக்குமான பனிப்போா் உச்சத்தை அடைந்தது.

முதல்வா் தலைமையில் ஆளுநருக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனால், கடந்த ஜனவரி தொடக்கத்தில் பாதுகாப்புக்காக ஆளுநா் மாளிகையைச் சுற்றி அனைத்துச் சாலைகளிலும் இரும்பு தடுப்புக் கட்டைகள் போடப்பட்டு மூடப்பட்டன. துணை ராணுவத்தினா் குவிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், திடீரென கடந்த புதன்கிழமை ஆளுநா் கிரண் பேடி பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். இதையடுத்து, தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், புதுவை பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு, அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இதைத் தொடா்ந்து, புதுவை ஆளுநா் மாளிகையைச் சுற்றி அனைத்து சாலைகளிலும் போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புக் கட்டைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன. அங்கு, பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த துணை ராணுவப் படையினரும் விலக்கப்பட்டனா். இதனால், தலைமை தபால் நிலையச் சாலை, மணக்குள விநாயகா் கோயில், கடற்கரை, தலைமை நூலகம், பாரதி பூங்கா பகுதிக்குச் செல்லும் பிரதான சாலைகள் திறக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT