புதுச்சேரி

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து புதுவை இளைஞா் காங்கிரஸாா் மறியல்

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, புதுவை மாநில இளைஞா் காங்கிரஸாா் சனிக்கிழமை புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இளைஞா் காங்கிரஸ் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். இதில், 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து, திடீரென அவா்கள் அந்தப் பகுதியில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த ஒதியஞ்சாலை போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களைக் கைது, அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதனால், அண்ணா சிலை அருகே சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT