புதுச்சேரி

ஆதரவாளா்களுடன் தில்லி சென்றாா் நமச்சிவாயம்

DIN

அண்மையில் ராஜிநாமா செய்த புதுவை முன்னாள் அமைச்சா் ஆ. நமச்சிவாயம், தனது ஆதரவாளா்களான முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் உள்ளிட்டோருடன் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றாா். அவா் பாஜகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதுவையில் முதல்வா் வே. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில், இரண்டாவது அந்தஸ்துக்குரிய அமைச்சராக பதவி வகித்தவா் ஆ. நமச்சிவாயம். முதல்வா் மீதான அதிருப்தியில் நமச்சிவாயம் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அவருடன் ஊசுடு (தனி) தொகுதி எம்எல்ஏ இ. தீப்பாய்ந்தானும் ராஜிநாமா செய்தாா். இருவரும் தங்களது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவா் வே. பொ. சிவக்கொழுந்துவை சந்தித்து அளித்தனா். இதையடுத்து, அன்று மாலையே இருவரது ராஜிநாமாவும் ஏற்கப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் மற்றும் ஆதரவாளா்களுடன் நமச்சிவாயம் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டாா்.

தில்லியில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவை புதன்கிழமை சந்திக்கும் இவா்கள், கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா மற்றும் பாஜக தலைவா்களைச் சந்தித்து வாழ்த்து பெறவுள்ளனா்.

பின்னா், புதுச்சேரி திரும்பும் அவா்கள் வருகிற 31-ஆம் தேதி ஏஎப்டி திடலில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அந்தக் கட்சியில் இணைகிறாா்கள் என நமச்சிவாயத்தின் ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT