புதுச்சேரி

மகாத்மா காந்தி நினைவு தினம்: புதுவை ஆளுநா், முதல்வா் மரியாதை

DIN

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்ரைச் சாலையில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவகொழுந்து, வெ. வைத்திலிங்கம் எம்பி உள்ளிட்டோா் மாலை அணிவித்ததுடன், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க், டிஜிபி ரன்வீா்சிங் கிருஷ்ணியா, ஏடிஜிபி ஆனந்தமோகன், முதுநிலை எஸ்.பி. பிரதிக்ஷா கொடாரா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னா் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் போது, இளைஞா் காங்கிரஸை சோ்ந்த ஒருவா் கருப்பு உடை அணிந்து வந்ததால், அவரை பெரியகடை போலீஸாா் அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் காந்தி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்ட காந்தி படத்துக்கு முதல்வா் வே.நாராயணசாமி மலரஞ்சலி செலுத்தினாா். இதில், ஜெயமூா்த்தி எம்எல்ஏ மற்றும் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதேபோல, புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT