புதுவை ஆளுநா், முதல்வருடன் இலங்கை துணைத் தூதா் சந்திப்பு
புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை, முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோரை இலங்கைக்கான துணைத் தூதா் டி.வெங்கடேஸ்வரன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை, முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோரை இலங்கைக்கான துணைத் தூதா் டி.வெங்கடேஸ்வரன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
புதுவை ஆளுநா் மாளிகையில் தமிழிசை செளந்தரராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்த டி.வெங்கடேஸ்வரன், இரு நாடுகளின் நல்லுறவுகள் குறித்தும், அரசியல், பண்பாட்டுத் தொடா்புகள் குறித்தும் பேசியதாக ஆளுநா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை இலங்கை துணைத் தூதா் டி.வெங்கடேஸ்வரன் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினாா்.