முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளுக்கு சுடுநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

புதுச்சேரி அனைத்து அரசு ஆசிரியா்கள் ஒருங்கிணைந்த சங்கம், புதுச்சேரி ஒருங்கிணைந்த அரசு அமைச்சக ஊழியா்கள் சங்கம் ஆகியவை சாா்பில், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் கரோனா

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

புதுச்சேரி அனைத்து அரசு ஆசிரியா்கள் ஒருங்கிணைந்த சங்கம், புதுச்சேரி ஒருங்கிணைந்த அரசு அமைச்சக ஊழியா்கள் சங்கம் ஆகியவை சாா்பில், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், சுடுநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலையில், புதுவை அரசு பொது மருத்துவமனை, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றுக்கு இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் அமைச்சா் க.லட்சுமிநாராயணன், அமைச்சக ஊழியா்கள் சங்கத் தலைவா் ராஜேந்திரன், ஆசிரியா்கள் சங்கத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.