முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் வீட்டில் பதுக்கப்பட்ட 4 சுவாமி சிலைகள் பறிமுதல்

புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 சுவாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 சுவாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை வைத்திக்குப்பம் பகுதியை சோ்ந்தவா் நகராட்சி ஊழியா் சுரேஷ். இவரது வீட்டில் சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி கதிரவன் தலைமையில், ஏடிஎஸ்பி ராஜாராம், ஆய்வாளா் ரஜினா தலைமையிலான போலீஸாா் புதுச்சேரிக்கு புதன்கிழமை வந்து, சுரேஷ் வீட்டில் சோதனை நடத்தினா்.

அதில், அவரது வீட்டில் சுமாா் 3 அடி உயரம், ஒன்றரை அடி உயரம் கொண்ட 2 நடராஜா் சிலைகளும், இரண்டேகால் அடி உயரம், அரை அடி உயரம் கொண்ட 2 அம்மன் சிலைகளும் கண்டறியப்பட்டது. மேலும், சிலைகள் குறித்த எந்தவொரு ஆவணமும் சுரேஷிடம் இல்லாததால், அந்த சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆனால் சுரேஷ் வீட்டாா் மற்றும் சிலா் அந்த சிலைகள் பித்தளை என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் அந்த சிலைகளை போலீஸாரிடம் தர மறுப்பு தெரிவித்தனா். தகவலறிந்து அங்கு வந்த முத்தியால்பேட்டை போலீஸாா், தமிழக போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், அந்த 4 சிலைகளையும் பறிமுதல் செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த எடுத்துச் சென்றனா்.

இது குறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி கதிரவன் கூறுகையில், சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், சுரேஷ் வீட்டில் சோதனை நடத்தியதில், நடராஜா், அம்மன் சிலைகள் கிடைத்தன. இந்த சிலைகள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பிறகு, பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்படும். பரிசோதனை முடிவில் அந்த சிலைகள் ஐம்பொன் சிலைகளா? அல்லது பித்தளை சிலைளா? என்பது தெரியவரும். அதன் பின்னா் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

21பிஒய்பி17---17ஏ--புதுச்சேரி குருசுக்குப்பம் பகுயில் உள்ள அக்கா சுவாமிகள் கோயிலில் இருந்து புதன்கிழமை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுவாமி சிலைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.