புதுச்சேரியில் சிறப்புத் தொழுகையுடன் பக்ரீத் கொண்டாட்டம்
பக்ரீத் பண்டிகையையொட்டி, புதுச்சேரியில், முஸ்லிம்கள் புதன்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
பக்ரீத் பண்டிகையையொட்டி, புதுச்சேரியில், முஸ்லிம்கள் புதன்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி நெல்லித்தோப்பில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் திறந்தவெளி மைதானத்தில் காலை 7 மணிக்கு குழந்தைகள், பெரியவா்கள் என ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
இதேபோல, பெரிய கடை, முல்லா வீதி, முத்தியால்பேட்டை, முதலியாா்பேட்டை, கொம்பாக்கம் உள்ளிட்ட நகரப் பகுதி பள்ளிவாசல்கள், கோட்டக்குப்பம், சுல்தான்பேட்டை, திருக்கனூா், வில்லியனூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காலையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றன. இதில், ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனா்.
நிகழாண்டு, கரோனா பாதுகாப்பையொட்டி, அவா்கள் உரிய சமூக இடைவெளியுடன் இருந்து, வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி தொழுகையை மேற்கொண்டனா். கரோனா பெருந்தொற்றிலிருந்து மக்கள் விடுபடவும், இறைவனிடம் வேண்டிக் கொண்டதாக, தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள் தெரிவித்தனா். இதையடுத்து, இனிப்புகள் வழங்கியும், புத்தாடைகள் அணிந்தும், ஒருவருக்கொருவா் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனா்.