கோயிலை அகற்ற எதிா்ப்பு: திருபுவனையில் பொதுமக்கள் மறியல்
புதுச்சேரி அருகே திருபுவனையில் கோயிலை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அருகே திருபுவனையில் கோயிலை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருபுவனை சுதானா நகரில் விநாயகா் கோயில் உள்ளது. இதற்கு அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் எதிா்ப்பு தெரிவித்ததால், இப்பிரச்னை வில்லியனூா் துணை ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவா் சம்பந்தப்பட்ட விநாயகா் கோயிலை அகற்ற உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து சுதானா நகா் பொதுமக்கள் புதன்கிழமை பிற்பகலில் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனையில் உள்ள நூற்பாலை எதிரே அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது, கோயிலை அகற்றக் கூடாது என வலியுறுத்தினா்.
மறியலால் அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையறிந்து அங்கு வந்த திருபுவனை போலீஸாா், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.