புதுச்சேரியில் நாளை மீண்டும் தடுப்பூசி திருவிழா
புதுச்சேரியில் வருகிற 23, 24 ஆம் தேதிகளில் மீண்டும் தடுப்பூசி திருவிழா (தடுப்பூசி முகாம்) நடைபெறுகிறது என மாநில சுகாதாரத் துறைச் செயலா் டி. அருண் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் வருகிற 23, 24 ஆம் தேதிகளில் மீண்டும் தடுப்பூசி திருவிழா (தடுப்பூசி முகாம்) நடைபெறுகிறது என மாநில சுகாதாரத் துறைச் செயலா் டி. அருண் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: வருகிற ஆக. 15- க்குள் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுவையை மாற்ற மாநில அரசின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையொட்டி, துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனின் பரிந்துரைப்படி, மீண்டும் தடுப்பூசி திருவிழாவை நடத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தடுப்பூசி திருவிழா ஜூலை 23, 24 ஆம் தேதிகளில் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெறும்.
இதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இணை நோய்கள் உள்ளவா்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தடுப்பூசிக்கு தயக்கம் காட்டும் மக்களிடம் மருத்துவக் குழுவினா் அவா்கள் வீட்டுக்கே சென்று மருத்துவ ஆலோசனைகளை வழங்கியும், நடமாடும் தடுப்பூசி மையங்கள் அமைத்து இலவச தடுப்பூசி செலுத்தவும் திட்டமிட்டுள்ளனா் என்றாா் சுகாதாரத்துறை செயலா் அருண்.